மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதகால் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த பிரதேச செயலக பிரிவு, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தின் நாகொட, யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டி, நெலுவ பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் வலல்ளாவிட்ட, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, யட்டியாந்தோட்ட, இரத்னபுரி மாவட்டத்தின் எகலியகொட, கிரிஎல்ல பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது நாளை மாலை நான்கு மணி வரை அமுலில் இருக்கும்; என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.