வெசக் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்;தி செய்யப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெசக் உற்சவத்திற்கு சமாந்தரமாக ஆறு விகாரைகள் புனித பூமிகளாக பெயரிடப்படுவதாக புத்த சாசனம,; சமயம் மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தளம், குருநாகல், கம்பஹா மாவட்டங்களிலுள்ள ஆறு விகாரைகளே இவ்வாறு புனித பூமிகளாக பெயரிடப்பட்டிருக்கின்றன.
இதற்கான எழுத்துமூல ஆவணங்கள் அரச வெசக் நிகழ்வின்போது ஜனாதிபதியினால் விகாராதிபதிகளிடம் கையளிக்கப்படும்.