Home » ஆலோசனைகளுக்குப் புறம்பாக, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தல்

ஆலோசனைகளுக்குப் புறம்பாக, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவுறுத்தல்

Source
Share Button

நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருளின் விலை நான்கு மடங்கினால் அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தினால், எரிபொருள் இறக்குமதியில் வரையறைகளும் ஏற்படலாம். எரிபொருள் விநியோகத்தின் போது, விசேட நடைமுறைகளை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதற்கென மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் கூறினார். எதிர்வரும் சனிக்கிழமை எரிபொருள் விநியோகிக்கப்படவிருக்கும் நிரப்பகங்கள் பற்றிய தகவல்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்படவிருக்கின்றன. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலும் எரிபொருள் சிக்கனமாகவே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கூட்டுத்தாபனம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பெரும்பாலான ஊழியர்கள் தற்சமயம் சைக்கிளில் வேலைக்குக் செல்வதாகவும் அவர் கூறினார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் ஆலோசனைகளுக்குப் புறம்பாக, எரிபொருளுக்கான வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image