ஆளுநருக்கான அதிகாரங்களை ஜீவன் தியாகராயா படித்து பணியாற்ற வேண்டும்; என சி.தவராசா தெரிவிப்பு.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா ஆளுநர்களிற்கு அரசியல் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை படித்த பின்பு பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாச சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் ஈ.பி.டி.பி உறுப்பினருமான சி.தவராசா தெரிவித்தார்.
ஆளுநர் ஒருவருக்கு எந்தவொரு அதிகாரமும் அற்ற நியதிச் சட்ட உருவாக்காத்தினை சட்ட முரணாக ஆளுநர் தற்போது மேறகொண்டுள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண நியதிச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சபைகளிற்கு உரியதே அன்றி மாகாண ஆளுநருக்கு கிடையாது.
இதனை அறியாத வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா 2022-10-27 அன்று வட மாகாணத்தின் வாழ்வாதார முகாமைத்துவ சேவைகள் நியதிச் சட்டம் மற்றும் சுற்றுலாப் பணியகம் நியதிச் சட்டம் என இரு நியதிச் சட்டங்களை 2303/29 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
அரசியலமைப்பின் 154- எ-01 இன் பிரகாரம்
ஒவ்வொரு மாகாண சபையும் 9 ஆம் அட்டவணையின் முதலாம் நிகழ்ச்சி நிரலின் ( மாகாண சபை நிரல்) ஏதேனும் கருமம்
தொடர்பில் எம் மாகாணத்திற்கென அச் சபைபை ஸ்தாபிக்கப்பட்டதோ அம் மாகாணத்திற்கு ஏற்புடையதான நியதிச் சட்டங்களை ஆக்கலாம். என்றே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலகம் வடக்கில் உள்ளதா கொழும்பில் உள்ளதா என்றுதான் தெரியாத நிலைஎன்றால் ஆளுநருக்கு தனக்குரிய பணியே தெரியவில்லை. தெரியாதுவிடின் அனுபவம் உடையவர்களிடம. கேட்டு செயல்படலாம் அதுவும் தவறு கிடையாது. அல்லது அரசியலமைப்பை படித்தால் புரியும்.
மாறாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் இயக்குநர் கீழ் பணியாற்றும் பணியாளர்களிற்கு உத்தரவு போடுவது போன்று செயல்பட்டு ஆளுநர் பதவியை கொச்சைப்படுத்தக் கூடாது.
ஓர் ஆளுநர் நியதிச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் உண்டு என வடக்கு மாகாண ஆளுநர் விவாதிப்பாரேயானால் அது தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கும் நான் தயாராகவே உள்ளேன் என்றார்.
TL