Home » ஆளும்கட்சியின் விசேட சந்திப்பு இன்று ஜனாதிபதி தலைமையில்

ஆளும்கட்சியின் விசேட சந்திப்பு இன்று ஜனாதிபதி தலைமையில்

Source
Share Button

ஆளும் கட்சியின் விசேட சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறும். அவசரகால சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதல், சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தல் போன்ற விடயங்கள் குறித்து அங்கு கவனம் செலுத்தப்படும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு நியமிகக்ப்பட்டதன் பின்னர் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அனுமதியை பெறுவதற்காக பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை ஜனாதிபதி அலுவலக முன்றலிலிருந்து வெளியேற்றுவது குறித்த விவாதம் ஒன்றும் நாளை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image