Home » ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகலரும் நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகலரும் நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு

Source
Share Button

ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சியில்; அங்கம் வகிக்கும் அனைவரும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். அரசை பாதுகாப்பதே பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீடுகள் பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் இன்று பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய தான் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த போராட்டத்தின் போது பாராளுமன்றத்தை பாதுகாத்தமை தொடர்பில் ராணுவத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ராணுவத்தின் எதிர்காலம் பற்றி அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் ராணுவத்தை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளின் பதவியுயர்வு அதிகரித்திருப்பதினால், ராணுவத்திற்கு அதிகளவான நிதியினை வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்க நேரிட்டுள்ளது.

மனித உரிமைகள் என்ற போர்வையில் மறைந்து கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சகலரும் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும். போராட்டத்தடன் தொடர்புபட்ட எந்தவொரு பல்கலைக்கழக மாணவரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். அனைத்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி எட்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அவர் பல்கலைக்கழக மாணவராக செயற்படுகிறார். வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற போதும் பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image