இக்கட்டான நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்க சஜித் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

நாட்டைக் கட்டியெழுப்பும் சிரமமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள சஜித் பிரேமதாஸ தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நிலவும் நெருக்கடி நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் ஏனைய தலைவர்களும் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
