இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி சிறப்பான துடுப்பாட்டம்

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்போது மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி மழையால் போட்டி இடைநிறுத்தப்படும் வரை 42.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை இழந்து, 292 ஓட்டங்களை பெற்றிருந்தது.
