பொதுமக்களுக்கு சுதந்திரமாக நடமாடவும் சமய வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மாத்திரமும் காலிமுகத் திடலைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கு காலிமுகத் திடலை பயன்படுத்த இடமளிக்கப்போவதில்லை என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இசை நிகழ்ச்சிகள், போராட்டங்கள் என்பனவற்றினால் காலிமுகத் திடலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.