இடைக்கால ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்காக இடம்பெறும் வாக்களிப்பு தொடர்பில் சமூக ஊடகங்கள் வாயிலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கின்ற முறை குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

இடைக்கால ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்காக இடம்பெறும் வாக்களிப்பு தொடர்பில் சமூக ஊடகங்கள் வாயிலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கின்ற முறை குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சபாநாயகர் அனுப்பிய இந்த கடிதம் பொலிஸ் மா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றவியல் பிரிவுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குற்ற புலனாய்வு திணைக்களம் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்து இருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுதல், அவற்றை உருவாக்குதல், பகிர்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு குற்ற புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
