இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கிய உதவிகளின் ஒரு பகுதி வடக்கின்ற்கு இன்று காலை எடுத்து வரப்படுகின்ற நிலையில் உடையாரின் திருவிழாவில் சடையார் வானம் விட்டதுபோல் அரச அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 2 ஆயிரத்து 250 கிலோ பால்மாவில் இருந்து ஒரு பகுதியான 60 ஆயிரம் கிலோ அரிசி மற்றும் ஆயிரத்து 500 கிலோ பால் மா என்பனவே இன்று காலை 10 மணிக்கு இராணுவத்தினரின் இரு வாகனங்களில் எடுத்து வரப்பட்டு ஆரம்ப விநியோகம் இடம்பெறவுள்ளது.
இதேநேரம் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில. இடம்பெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருடன் செந்தில் தொண்டமானும் கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்வாறு தமிழ்நாடு அரசிடம் ஒருபகுதி அரசியல்வாதிகள் கோரிக்கை முன்வைத்த காலத்தில் இலங்கையின. ஆட்சி தப்பி பிழைக்குமா அல்லது யாரின் வீடு கொழுத்தப்படுகின்றதோ எம்மை வீதியில் கண்டால் மக்கள் அடித்து விரட்டுவரோ என அஞ்சி அடங்கி அஞ்யாதவாசம. புரிந்த அரசியல்வாதிகள் தற்போது மீண்டும் துள்ளிக் குதிக்கின்றனர்.
கிராமத்தில் ஓர் பேச்சு வழக்கம் உண்டு அதாவது கள்ளன் போன பின்பு விசுவா பொல்லை எடடா எனக் கூறி முன்னுக்கு நிற்பார்கள் என நாட்டில் நிலவும் கோர நெருக்கடிக்கு தம்மால் ஏதும் செய்ய முடியாத அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தமிழ்தாட்டில் பள்ளிச் சிறுமி தனது கல்விக்கு உண்டியலில் சேர்த்த பணத்தில் வேண்டிய நிவாரணத்தையும் கையேந்தி மற்றவர்களிடம் இரந்து வாழும் ஒருவர் வழங்கிய பணத்மில் வாங்கிய பணத்தில் கொள்வனவு செய்த பொருளை தூக்கி வழங்க அதினைவிட அதிக பணம் எரிபொருளிற்கு செலவு செய்து முல்லைத்தீவு வருகின்றனர்.
இதனையே உடையாரின் திருவிழாவில் வான வேடிக்கைக்காக சடையார் வானம் விட்டு பெயர் எடுப்பது எனபர்.
இது தொடர்பில் மாவட்ட உள்ளூர் அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கும்போது யாழ்ப்பாணத்தின் அரசியல்வாதி ஒருவர் சென்று செந்தில் தொண்டமானின் கிராமத்தில் நிவாரணம் விநியோகம் செய்தால் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உண்டா எனக் கேள்வி எழுப்பினார்.
TL
The post இந்தியாவின் நிவாரணத்திலும் அரசியல் ஆதாயம்தேட முயற்சியா?. appeared first on LNW Tamil.