தமிழ் மக்களிற்காக ஓர் பண்பாட்டு கட்டிடத்தை கட்டி வழங்கிய இந்திய அரசிற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையிலே நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான பெப்ரவரி மாத கூட்டம் இன்று சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சொ.சிறில் இத் தீர்மானத்தை முன் மொழிந்தார்.
இதன்போது இந்திய அரசின் 100 கோடி ரூபா இந்திய நாணயத்தில் 2014-06-09 அன்று இந்தியத் தூதுவர் வை.கே.சிங்காவுடன் இலங்கை அமைச்சர் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 2016ஆம் ஆண்டு யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரும் யாழ் மாநகர சபை ஆணையாளரும் ஒப்பந்தம் எழுதி மேற்கொண்ட 11 அடுக்கு மாடிக் கட்டிடம் சபைக்கு கிடைக்கவும் இந்தியாவே ஆவண செய்ய வேண்டும் எனவும் இதனை அமைத்து தந்தமைக்கும் இந்திய அரசிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் வழிமொழிந்தார்.
கலாச்சார நகரத்தில் ஓர் கலாச்சார நகரத்தை அமைத்து தந்து அதற்கு 5 ஆண்டுகளிற்கான செலவீனத்தையும் ஏற்று இதனை அமைத்து தந்த அதே நேரம் பெரும் நெருக்கடியின் மத்தியிலும் அதனை எமக்கு கிடைக்க இறுதிவரை முயன்ற இந்தியத் தூதரகத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் அனுப்பும் அதேநேரம் அதனை கிடைப்பதனையும் உறுதி செய்ய வேண்டும் எனக்கோரப்படும் என மாநகர முதல்வர் தெரிவித்தார்.
TL