அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயத்திற்கு முன்னதாக இந்தியா – இலங்கை கிரிட் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஜூலை 20 ஆம் திகதி இந்தியாவிற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
முன்மொழியப்பட்ட கிரிட் இணைப்பு இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய படியாகும். முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் தேசிய கிரிட்களும் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்தியா ஏற்கனவே எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முற்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியின் போது, பண பரிமாற்றம், கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கடன் வரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக நீட்டித்தது.