Home » இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கான கடன் விடயத்தில் சீக்கிரம் முடிவுகளை எடுக்க வேண்டும்!

இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கான கடன் விடயத்தில் சீக்கிரம் முடிவுகளை எடுக்க வேண்டும்!

Source

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக கடந்த மாதம் இந்திய மற்றும் சீன அதிகாரிகளுடன் “பரிஸ் கிளப்” யோசனைகளை பரிமாறிக்கொண்டிருந்தது. அது தொடர்பான பதிலுக்காக “பரிஸ் கிளப்” காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியைப் பெறுவதற்கு கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியது.

இந்நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு பிரதான கடன் வழங்குநர்களாகவுள்ள சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை எட்டியுள்ள உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்,

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அந்த வகையான நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளை IMF தேடுகிறது. செய்ய நிறைய பணிகள் உள்ளன. நாம் அவசரமாகச் செயல்பட வேண்டும்.

நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றாகச் செயல்பட வேண்டும். இந்தியாவும் சீனாவும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து உடனடியாக தமது பங்களிப்பை பரிஸ் கிளப்க்கு வழங்க வேண்டும். இருநாடுகளும் இந்த விடயத்தில் தாமதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image