Home » இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்பெற்ற இரண்டாவது தொகை பசளை

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்பெற்ற இரண்டாவது தொகை பசளை

Source
Share Button

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைக்கும் இரண்டாவது தொகை பசளையை பகிர்ந்தளிக்கும் போது தேயிலை மற்றும் சோளச் செய்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த பசளை நேற்று இலங்கையை வந்தடைந்தது. இவற்றை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு ஏற்றும் நடவடிக்கை நேற்றே ஆரம்பமானது. பெரும்போகத்திற்கான பசளையை பெற்றுக்கொள்ளும் கேள்விப்பத்திரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறிப்பிட்ட பசளையை இலங்கைக்கு கையளிக்கும் வகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவும் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்டார். இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமது நாடு தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என அவர் கூறியுள்ளார். 21 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை நேற்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image