ந.லோகதயாளன்.
இந்தியாவிற்குச் சொந்தமான மிகப் பெரும் கப்பல் ஒன்று மன்னார் பேசாலைப் பகுதியில் தரை தட்டியுள்ளது.
இந்திய கரையோரத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அலையில் அடித்து வரப்பட்ட நிலையிலேயே பேசாலையில் தரை தட்டியுள்ளது.
தரையில் இருந்து சுமார் 250 மீற்றர் தூரத்தில் கப்பலும் தரையோடு வாச்சும் உள்ளது. இதில் பணியாற்றிய 9 பணியாளர்களும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்த்துள்ளனர்.
இந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 9 பணியாளர்களில் 4 பேர் இந்தியர்கள் எனவும் ஐவர் இந்தோனேசியர்கள் எனவும. கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் இந்தியாவிற்குச் சொந்தமான இக் கப்பல் மாலைதீவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிக்கொண்டிருந்த சமயமே இவ்வாறு அலையின் காரணமாக மன்னார் கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.