இந்திய ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது

16ஆவது இந்திய ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னணி அரசியல்வாதியும், காந்தியின் பேரனுமான கோபால் கிருஷ்ண காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 77 வயதான கோபால் கிருஷ்ணா காந்தி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் செயற்பாடுகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இந்த நடவடிக்கை எதிர்வரும் 29ஆம் திகதி வரை இடம்பெறும். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
