இந்திய ஜனாதிபதி தேர்துல் இன்று நடைபெறுகிறது

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது. தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தலில் அனைத்து மக்களவை, சட்டசபை உறுப்பினர்களும் வாக்களிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
