தமிழக மீனவர்களின் நாட்டுப் படகுகளிற்கு வாரத்தில் இரு நாள்களிற்கான அனுமதி வழங்கும் முயற்சிகள் இடம்பெறுவது உண்மை என கடற்றொழில் அமைச்சு வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
வத்தை எனப்படும் நாட்டுப் படகுகளிற்கு மட்டும் வாரத்தில் இருநாள்கள் இந்த அனுமதி வழங்குவது தொடர்பில் பேச்சு இடம்பெறவுள்ளது. ஏனெனில் இந்திய வத்தையில் இருப்பது 40 முதல் 50 குதிரை வலுக்கொண்ட இயந்திரங்கள் இருக்கும் ஆனால் ரோளர் படகுகளில் 150 குதிரை வலுக் கொண்ட இயந்திரங்கள் காணப்படுவதனால் அவை தொடர்பில் ஆராயப்படவே மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா விரைவில் டில்லி பயணமாகவுள்ளார் இதன்போது இதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று இறுதித் தீர்வு எட்டப்படவுள்ளது.
இதேநேரம் இவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில் இந்தியத் தரப்பிடம் இருந்து அறவிடப்படும் நிதி இலங்கையின் திறைசேரிக்கு அன்றி நேரடியாகவே வடக்கு மீன்பிடி அபிவிருத்திக்கு பயன்படுத்தும் வழி முறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான முன் ஏற்பாடுகள் அண்மையில் யாழ்ப்பாணம் ஊடாக பயணித்த இந்திய மீன்பிடி அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் மேற்கொண்டதாகவும் இருந்தபோதும் ட்ரோளர் படகுகள் தொடர்பில் எந்தவொரு பேச்சிற்கும் சந்தர்ப்பமே இல்லை என இலங்கை தலப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
TL