இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மோர்னிங் கன்சல்ட் வெளியிட்ட குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங்ஸ் மூலம் இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, 78 சதவீதமான இணக்கப்பாடுகளை பெற்றுள்ளார். சமீபத்திய தரவரிசையின்படி, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மேனுவல் மெக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இந்தியப் பிரதமருக்கு அடுத்தப்படியாக உள்ளனர்.