முல்லைத்தீவு கடலில் கைதான 9 இந்திய மீனவர்களையும. எதிர் வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க திருகோணமலை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இலங்கையின் முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 9பேர் கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் நாகைபட்டினத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகில் பயணித்த 9 மீனவர்களுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடித்த சமயமே கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு முல்லைத்தீவு கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட 9 இந்திய மீனவ்களும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் நேற்று திருகோணமலை பதில் நீதவான் அப்துல் சலாம் சகீர் முன்னிலையில் ஆயர் செய்யப்பட்டனர்.
இவ்வாறு ஆயர் செய்யப்பட்ட 9 மீனவரையும் எதிர் வரும் 25 ஆம் திகதிவரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதேநேரம் மீனவர்கள் தொழில் புரிந்த படகில் இருந்த 2 ஆயிரத்து 200 கிலோ மீனையும் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
TL