இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 5 பேர் ஓர் படகுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது இந்தியப் படகு மயிலிட்டி துறைமுகம் கொண்டு வரப்படவுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளை ஊர்காவற்றுறை பர நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்படவுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டது நாகைபட்டினம் மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த IND/06/MM-477 இலக்க படகு என்பதும் குறிப்பிடத்தக்கது.
TL