இந்த வருடம் சிறுபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் பொலநறுவை மாவட்ட விவசாயிகளுக்கு ரசாயன உரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது

.
இந்த வருடம் சிறுபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் பொலநறுவை மாவட்ட விவசாயிகளுக்கு ரசாயன உரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று கல்அமுன விவசாய சேவை மத்திய நிலையத்தில் 160 விவசாயிகளுக்கு 500 மூடை உரம் விநியோகிக்கப்பட்டது. சந்தையில் 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோ கிராம் யூரியாவை விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மானிய விலையில் ரசாயன பசளையை வழங்கியமைக்காக மக்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா பாசளையின் முதல் தொகுதியாக 44 ஆயிரம் மெட்ரிக் தொன் பசளை கடந்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
