இந்த வருடம் 85 மெற்றிக் தொன் சிறு ஏற்றுமதி பயிர்களை ஏற்றுமதி செய்ய திட்டம்

இந்த வருடம் 85 ஆயிரம் மெற்றிக் தொன் சிறு ஏற்றுமதிப் பயிர்களை ஏற்றுமதி செய்வது இலக்காகும் என ஏற்றுமதி விவசாயத் துறை தெரிவித்துள்ளது. இதனூடாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் ரூபா அந்நியச் செலாவணி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.பி.திஸ்னா தெரிவித்தார். கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட சிறு ஏற்றுமதிப் பயிர்களின் அளவு 62 ஆயிரத்து 582 மெற்றிக் தொன்களாகும். இந்த இலக்கை அடைந்து கொள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, அவர்களுக்கு உயர்தரத்திலான பயிர்கள், தொழில்நுட்ப அறிவு பயிற்சி என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன.
