இந்த வருட நிறைவுப் பகுதிக்குள் நாட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளும் தொழில்நுட்ப அறிவும் பெற்றுக்கொடுக்கப்படும். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.