Home » இன்னமும் அரசு திருந்தவில்லை – பா.உ. தர்மலிங்கம் சித்தார்த்தன்

இன்னமும் அரசு திருந்தவில்லை – பா.உ. தர்மலிங்கம் சித்தார்த்தன்

Source

இன்னமும் அரசு திருந்தவில்லை. இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னரும் அரசு திருந்தவில்லை. நாங்கள் இந்த குறுந்தூர் மலைப்பிரச்சினையைப் பார்த்தால் தெரியும். இப்பெழுதும் காணிகளை அளப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை கிழக்கு ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் புளொட் அமைப்பின் உப தலைவர் பொன் செல்லத்துரை (கேசவன்), கட்சியன் இடைக்காலச் செயலாளர் நா.ரெட்ணலிங்கம் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.

இவ் ஊடுகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்,

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி உலகம் முழுக்க இந்த பொருளாதார நெருக்கடி இருக்கிறது. பின்னடைவுகள் இருக்கிறது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா, இரண்டாவது ரஸ்ய – உக்ரேன் யுத்தம். ஆனால். இலங்கையைப் பொறுத்தமட்டில் இவை எல்லாவற்றையும் தாண்டிய நெருக்கடியொன்றை நாங்கள் முகம் கொடுக்கிறோமென்றால் இந்த கோட்டபாய அரசாங்கத்தினுடைய தவறுதலான நடைமுறைகள் காரணமாகத்தான். பல விடயங்களில் கடந்த காலங்களில் யாரையும் கேட்காமல் தான் செய்வது சரியென்று செயற்பட்ட அகம்பாவத்தினாலேயே ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அவர் இப்போது மன்;னிப்புக் கேட்டாலும் மீண்டும் பொருளாதாரத்தைக் கொண்டுவர முடியாது.

இந்தப் பொருளாதாரப் பிரச்சினை நிவர்த்தியடைவதற்கு நாம் அல்ல, மிக நீண்டகாலம் எடுக்கப்போகிறது. மிக அண்மையில் இன்னும் பெரிய நெருக்கடி வரப்போகிறது. பெற்றோல் மாத்திரமல்ல உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போகிறதென்று பிரதமர் அவர்களே சொல்லுகின்றார். அதை அவர் சொல்லத் தேவையில்லை. நாங்கள் எல்லோரும் நேரடியாகவே பார்க்கின்றோம். இது நிவர்த்தியாவதற்கு மிக நீண்டகாலம் எடுக்கப்போகின்றது. நாம் அனைவரும் பஞ்சத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம். பொது மக்களைப் பொறுத்தமட்டில் வட கிழக்கில் இந்தப் பஞ்சத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எங்களுடைய கட்சி ஊடாக, அங்கத்தவர்கள் ஊடாக உதவ முடியுமா என்று பார்க்கின்றோம்.

வீட்டுத் தோட்டங்கள், சிறு தோட்டங்கள், செய்வதற்கு புலம்பெயர் தோழர்கள் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பெரியளவில் செய்யமுடியாது. பெரியளவில் செய்யமுடியாது. அரசாங்கமே அதைச் செய்யவேண்டும். பாராளுமன்றத்தினைப் பொறுத்தவரையில் நாங்கள் சொல்லமுடியம். அதனை செயற்படுத்துகின்ற நிலைமை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும், அரசாங்கத்திடமுமே தான் இருக்கின்றது.

ரணிலுக்கும் மகிந்தவுக்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது நட்பு இருக்கிறது. அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆரம்பத்தில் தான் பதவியை ஏற்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், அவரால் சில விடயங்களைச் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுவரை நடைபெற்ற செயற்பாடுகள் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. ஆனால் இந்தியா யார் பிரதமராக இருந்தாலும் உதவிகளைச் செய்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு நேரடியாகவே கூறியிருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கின்ற ஒரு நாட்டை, அயல் நாட்டை பட்டினியாக இருக்க விட முடியாது என்று சொன்னார்கள். நீங்கள் அதைச் செய்யுங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்றே நாங்களும் சொன்னோம். ஏனென்றால் நாடு முழுக்க சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற வகையில் பொறுத்திருப்போம். ஆனால் நீய்ட காலமில்லை. மக்கள் பட்டினிச் சாவை அடைவதற்கு முன்னர் ஏதாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.

புலம்பெயர் சமூகத்தால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை. விரும்புவார்கள் என்றும் நான் நம்பவில்லை. இன்னமும் அரசு திருந்தவில்லை. இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னரும் அரசு திருந்தவில்லை. நாங்கள் இந்த குறுந்தூர் மலைப்பிரச்சினையைப் பார்த்தால் தெரியும். இப்பெழுதும் காணிகளை அளப்பதற்கு முயற்சிக்கிறார்கள். சர்வகட்சி மகாநாட்டில் கூட ஜனாதிபதி அவர்களிடம் இதனைச் சொன்னபோது அதனைப்பற்றித் தெரியாது என்று சொன்னார் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் பாராளுமன்றத்திலும் நீங்கள் திருந்தவில்லை என்று நேரடியாகச் சொன்னேன். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் எந்தவிதத்திலும் இதற்கு முன்வர மாட்டார்கள். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கின்றபோது அவர்களும் இதில் பங்குதாரர்களாக இங்கே வந்து அவர்களுடைய முதலீடுகளைச் செய்வதென்றால் அதற்கு உத்தரவாதம் வேண்டும். நான் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றேன் அவர்கள் இங்கு முதலீடு செய்ய வந்தால்இங்கு வேண்டாம் தெற்கிலே செய்யுங்கள் என்று அதிகாரிகள் புத்திமதி சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் நாங்கள் கேட்கவும் முடியாது. வரவும் மாட்டார்கள்.

எங்களைப் பெறுத்தவரையில் எங்களுடைய தோழர்கள் தங்களால் இயன்றவரை சில சில உதவிகளைச் செய்வதற்கு முன்வந்திருக்கிறார்கள். மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் செய்து கொண்டிருக்கின்றோம். தனியொரு கட்சியாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவோ செய்யமுடியாது.

21ஆவது திருத்தச்சட்டம் சரியான வரைபு வரவில்லை. எந்தவொரு வரைபும் சமர்ப்பிக்கப்படவுமில்லை. அப்படியிருக்கையில் நாங்கள் அதனைப் பார்க்காமல் ஆதரிக்கிறோம். ஆதரிக்கவில்லையென்று சொல்வது சரியுமில்லை. ஆனால் ஒன்று ஜனாதிபதியினுடைய அதிகாரம் நீக்கப்பட்டால் அதிலிருந்து வரக்கூடிய ஆளுனருக்கான அதிகாரம் நீக்கப்பட்டு, முதலமைச்சர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். முதலமைச்சர் வருகிறாரோ அன்று பார்த்துக் கொள்வோம். இப்படியான சில விடயங்களை நாங்கள் வலியுறுத்துவோம்,

ஏனென்றால், முழுமையான ஒரு அரசியலமைப்பு மாற்றம் வரப்போவதில்லை. ஆகவே அதில் போயிருந்து கொண்டு நாங்கள் சமஸ்டி அமைப்பது பற்றியெல்லாம் பேசமுடியாது. எது கிடைக்கிறதோ அதை எடுக்க வேண்டும். சரியான முறையில் எடுக்கவேண்டும் என்பதுதான் எங்களது அவிப்பிராயம். அதற்கான சந்தர்ப்பம் ஏற்படப்போவதில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தலாமென்று. அது கூட நடைபெறப்போவதில்லை. அரசியல் ரீதியான பிரச்சினை இறுகிக்கொண்டே செல்லும்.

கோட்டபாயவினுடைய பிழையால் நடைபெற்ற விடயங்களால் உருவான சுமைகளை நாங்கள் ஏன் தலையில் தூக்கி வைக்கவேண்டுமென்ற எண்ணப்பாட்டிலேயேதான் எல்லோரும் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துக்கொண்டிருந்தார்கள். ஆகவேதான் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று வரமுடியாமலிருந்ததற்கு அதுவும் காரணம். நாங்கள் ஒரு கூட்டமைப்பாக அதில் பங்குபற்றுவதற்குத் தயாராக இருக்கவில்லை. உண்மையாகவே நாடு முழுவதும் செய்யவேண்டும் என்ற அவிப்பிராயம் வந்தால் அது வேறு விடயம்.

எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் மீதான பிரச்சினைகளை அவர்கள் தொடர்ந்தும் செய்து கொண்டு போகின்றார்கள். எங்களுடைய மக்களுக்கு எதிரான விடயங்களை அவர்கள் செய்துகொண்டு போகின்றார்கள். சர்வகட்சி அரசு வந்திருந்தாலும் அதனையே செய்திருப்பார்கள்.

AR

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image