Home » இன்று முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு

இன்று முதல் கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு

Source
Share Button

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் மறுசீரமைக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒருநாள் சேவை கடவுச்சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், சாதாரண சேவை கட்டணத்தை மூவாயிரத்து 500 ரூபாவில் இருந்து ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டுக் கட்டணம் ஏழாயிரத்து 500 ரூபாவில் இருந்து ஒன்பதாயிரம் ரூபாவாகவும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் சாதாரண சேவைக் கட்டணம் இரண்டாயிரத்து 500 ரூபாவில் இருந்து மூவாயிரம் ரூபாவாகும் அதிகரிக்கப்படவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image