இம்முறையும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் புத்தாண்டு விசேட நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப தேசிய வானொலி ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 முதல் மாலை 5.30 வரை சிங்கள தேசிய சேவையின் ஊடாக இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். கலாசார மரபுரிமை எதிர்காலச் சந்ததி;க்கு என்பது இம் முறை தொனிப்பொருளாகும். கொழும்பு பிரதான அலுவலகத்தில் இருந்து பிராந்திய சேவைகளை இணைத்துக்கொண்டு நாடு முழுவதிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 33 ஆவது தடவையாகவும் இலங்கை வங்கி இதற்கு அனுசரணை வழங்குகின்றது. இலங்கை வங்கியின் கிளை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர் பியால் சில்வாவும் இதில் பங்கேற்பார். புத்தாண்டு பலகார மேசைக்கு ரெஸ்டா நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.