இம்முறை பண்டிகைக் காலத்தில் தபால் சேவையின் வருமானம் சாதகமான வளர்ச்சியைக் காட்டுவதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். முகவர் சேவையாக மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச கூரியர் சேவைகளின் இந்த நாட்களில் அதிகரித்துள்ளன. இதற்கு மேலதிகமாக இந்தக் காலப்பகுதியில் தபால் மூலம் பொருட்களை அனுப்பும் முறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்களத்தின் 14 பில்லியன் ரூபா நிதி இலக்கை அடைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இதன் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.