இம்முறை பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

இம்முறை பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பெரும்போகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தமையால், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை சமப்படுத்த முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மாவட்ட பிரதம சங்கநாயகர் கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹா போதியில் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார். அங்கு மஹா சங்கரத்ன ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களை வழங்கினர்.
