பஸ்யால கஜுகமவில் இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், கொழும்பில் இருந்து மூதூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பஸ்களின் ஓட்டுநர்கள் உட்பட காயமடைந்த 27 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
23 பேர் வத்துபிட்டிவல வைத்தியசாலையிலும், நால்வர் வரக்காபொல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து, கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கஜுகமவில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
N.S
N.S