இராணுவத்திற்காக மக்களை அணி திரட்டும் ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு எதிராக போராட்டம்

ரஷ்ய இராணுவத்திற்காக மக்களை அணி திரட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இராணுவத்தில் பணியாற்றி தற்போது வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இராணுவத்திற்கு அழைக்கப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் நேற்று அறிவித்துள்ளார். இதேவேளை, மேலும். மூனறு லட்சம் பேர் ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக யுக்ரேன் போரின் தாக்கம் மேலும் தீவிரமடையலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜனாதிபதி விளாதிமிர் புட்டினின் அறிவிப்புக்கு எதிராக ரஷ்யா முழுவதும் போட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திறகும் மேற்பட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
