இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாளம் வேலை நிறுத்த போராட்டத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படைகளில் சுமார் 1800க்கும் மேற்பட்ட மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர், மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்திருக்கும் இடையே மன்னர் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு 1 விசைப்படகையும் அதிலிருந்து 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்கு பதிவு செய்து தற்போது மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விசாரணைக்கு பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இந்த இராமேஸ்வரம் மீனவர்களின் கைது நடவடிக்கை கண்டித்து நேற்று இராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி டோக்கன் அலுவலகம் முன்பு மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் மீனவர்கள் முன்னிலையில் பல்வேறு கட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன , அதாவது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் மீனவர்களின் விசைப்படகையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கையின் மீனவர்களின் பேச்சு வார்த்தைய உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்,
அதனைத் தொடர்ந்து இன்று இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த தொழிலில் நேரடியாக பத்தாயிரத்து மேற்பட்ட மீனவர்களும் சார்பு தொழிலாக 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் வேலைகளுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களையும் இலங்கையில் உள்ள படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எடுத்துள்ளனர்.
TL