Home » இருபத்தி இரண்டாயிரம் மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

இருபத்தி இரண்டாயிரம் மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

Source
Share Button

22 ஆயிரம்; மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய இரண்டாவது கப்பல் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தப் பருவத்தில் நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு யூரியா உரத்தை கொள்வனவு செய்ய உலக வங்கி 105 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளது. அதன் கீழ் இலங்கை வந்த இரண்டாவது கப்பல் இதுவாகும்.
இந்த உரக்கப்பல் மலேசியாவில் இருந்து வந்துள்ளது. உரங்களை இறக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது உலக வங்கி கடனுதவியின் கீழ் இந்த பருவத்திற்காக முப்பத்தைந்தாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி யூரியா உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வரவுள்ளது. இதனிடையே, 40 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் முதல் வாரத்தில் கொழும்புக்கு வரவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image