Home Against Tamileelam இறக்குமதி பால்மா மேலும் அதிகரிக்கப்படும்…!

இறக்குமதி பால்மா மேலும் அதிகரிக்கப்படும்…!

Source

இறக்குமதி செய்யப்படும் பால்மா இன்றிலிருந்து (30) மீண்டும் அதிகரிக்கபடவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்க ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார கூறியுள்ளார்.

பால்மாவின் விலையில் எவ்வளவு அதிகரிக்கப்படுமென இன்று அறிவிக்கபடவுள்ளதாகவும், இந்த பால்மா விலையேற்றமானது பால்மா இறக்குமதியாளர்களால்; கூட்டாக அதிகரிக்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முதன்மையான பால்மா இறக்குமதி நிறுவனமாக ‘பொன்டேரா” நிறுவனம் கூறுகையில், கடந்த ஒக்டோபர் மாதம் பால் மா விலை அதிகரிக்கப்பட்டாலும் பின்பு ஒரு கிலோ பால்மாவினால் 100 ரூபாய்க்கும் மேற்பட்ட நட்டம் ஏற்பட்டுள்ளதால், தமது நிறுவனத்தின் பால்மா விலையும் அதிகரிக்கப்படக் கூடுமெனக் கூறுகிறது.

இறக்குமதி பால்மாவின் விலை கடந்த ஒக்டோபர் 10ம் திகதி அதிகரிக்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ பால்மா 250 ருபாயாலும், 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 100 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, பால் மா ஒரு கிலோ பக்கட்டொன்று ரூ. 1195க்கும், 400 கிராம் பக்கட்டொன்று ரூ.400க்கும் விற்கப்படுகிறது.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image