இலங்கை வெற்றிப்பாதையை நோக்கி பயணிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட நெருக்கடிகள் தற்போது இல்லாது செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை தடுப்பதற்கு எதிர்க்கட்சியின் சில குழுக்கள் முயற்சிப்பதாக கட்சியின் பலாங்கொட தொகுதி அமைப்பாளர் அச்சல ஜாகொட தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, சவால்களை பொறுப்பேற்று, அவற்றை திட்டமிட்டு வெற்றி கொண்டு முன்நோக்கிச் செல்லும் தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டார். கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோதே அச்சல ஜாகொட இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உரிய காலப்பகுதியில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் கட்சி என்று அதன் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு சரியான தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய தலைவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கி வெற்றியீட்ட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.