இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஒரு பயணத்திற்கு பயணியொருவரிடமிருந்து 50 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதுடன், 100 கிலோகிராம் பொருட்களை கொண்டுவர அனுமதிக்கப்படும்.
ஒரு படகு ஒரே தடவைகளில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும். காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை வந்தடையும்.
முதல் கட்ட நடவடிக்கைகளின்போது பகல் நேரங்களில் மாத்திரமே சேவை முன்னெடுக்கப்படும். காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.