இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் சில துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெறுதல், மனித வள அபிவிருத்தி, ஜப்பான் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வருதல், சுற்றுலா அபிவிருத்தி தொடர்பிலேயே குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட வேளையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.