பாக்கிஸ்தானின் கடற்படைத் தளபதி அட்மிரல் முகமட் அம்ஜத்கான் நியாசி பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இலங்கைக்கு, பாக்கிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையில் சமுத்திர பாதுகாப்பு, ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.