இலங்கைக்கும் பிரான்ஸக்குமிடையிலான ராஜதந்திர உறவுகளை; மேலும் வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோ பஸ்வா மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் அரசியல் விவகாரம் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பிரான்ஸ்க்கும் இலக்கைக்குமிடையிலான ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
