இலங்கைக்கும் பெலாரஸ் நாட்டிற்கும் இடையில் கல்வி, வர்த்தகம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கைக்கான பெலாரஸ் தூதுவர், இலங்கை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், வர்த்தக சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இதற்கான இணக்கம் காணப்பட்டது. பெலாரஸ் தூதுவர் இலங்கை பாரளுமன்றம், நீதி, கல்வி, வர்த்தக அமைச்சு உட்பட சிறைச்சாலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தன, பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோருடனும் தூதுவர் பேச்சுவர்ர்ததை நடத்தினார்.