இலங்கைக்கு அவசர உதவியாக ஜப்பானிடமிருந்து மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையின் பொருளாதார நிலைமைகளை தீர்த்துக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், ஜப்பான் அரசாங்கம் மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்கியுள்ளது. கடந்த மே மாதம் மூன்று மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 6.5 மில்லியன் டொலர்களை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
