இலங்கைக்கு கடத்த இருந்த 1500 கிலோ சமையல் மஞ்சள் முட்டைகளை தமிழ்நாடு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் கடத்த இருந்த சுமார் 1500 கிலோ மஞ்சள் மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகு மஞ்சளை கடல் கரைக்கு ஏற்றி வந்த வாகனம் உள்ளிட்டவைகள் தனிப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக வேதனை சேர்ந்த முகமது அப்துல் காசிம் என்பவரை போலீசார் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.