இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முறபட்ட 10 கோடி ரூபா பெறுமதியான கடல் அட்டை மற்றும் சுறா பீலி என்பன இராமேஸ்வரம் கியூப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் கட்டை கடத்துவதாக கியூப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின பெயரிலேயே மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 10 மூடை பதப்படுத்திய கடல் அட்டை மற்றும் 10 மூடை சுற பீலி எனபன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பொருட்களை ஓர் படகில் ஏற்றிய நிலையில் படகுடன கைப்பற்றிய பொலிசார் இதன்போது சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
TL