இலங்கைக்கு தொடர்ந்து உதவி வழங்க இந்தியா தீர்மானம்

இந்த இக்கட்டான நிலையில் தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் கூடிய விசேட நடவடிக்கை தொடர்பான பாராளுமன்ற உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. இதன்போது அந்த நாட்டின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார். இந்த கூட்டத்தின்போது இலங்கை முகம்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
