Home » இலங்கையர்கள் வெளிநாடு செல்வது அதிகரித்துள்ளது.

இலங்கையர்கள் வெளிநாடு செல்வது அதிகரித்துள்ளது.

Source
Share Button

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில், இரண்டு லட்சத்து 88 ஆயிரத்து 645 பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் மாத்திரம், மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 506 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியும் பண்டார குறிப்பிட்டுள்;ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அநேகமானோர் தொழிலுக்காக வெளிநாடு செல்வதே இதற்கான காரணமாகும் என்று அவர் தெரிவித்தார். ஒருநாள் சேவையில் வழங்கப்படும் அதிகபட்ச கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 500 ஆகும். இதனால், பொதுவான முறையின் கீழ், கடவுச்சீட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image