இலங்கையர் மீட்கப்பட்டதாக உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

உக்ரேன் கார்கிவ் பிரதேசத்தில் சிக்கியிருந்த ஏழு இலங்கையர்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய ஆக்கிரமிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் தொடக்கம் அவர்கள் அந்தப் பிரதேசத்தில் சிக்கியிருந்தனர். ரஷ்யப் படைகளால் சிறை வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குழு ஒன்று கார்க்கிவ் பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டதாக காணொளி ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்களில் ஏழு இலங்கையர்களும் அடங்குவர். இவர்கள் உக்ரேனில் கல்வி கற்பதற்காக வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி வொலடிமிர் ஸெலென்ஸ்கி காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையர் மீட்கப்பட்டதாக உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
