2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய “The Seven Moons of Maali Almeida” என்ற புத்தகத்திற்காக இந்த விருதை வென்றுள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்து எழுதப்பட்ட படைப்புக்கு இவ்விருது வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
2009 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், “எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள், யாருடைய தவறு என்பது பற்றிய தீவிர விவாதம் நடந்தபோது” “இறந்தவர்கள் தங்கள் கண்ணோட்டத்தை வழங்கக்கூடிய The Seven Moons of Maali Almeida என்ற புத்தகத்தை எழுத முடிவு செய்ததாக எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக கூறினார்.
புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலகவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
N.S