இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்திவருவதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடிகள் மற்றும் கடன் சுமைகளை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்குமான முயற்சிகளில் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்ந்தும் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வினவிய போது அவர் குறிப்பிட்டார்.
