இலங்கையின் 75ஆவது சுதந்திர நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கரிநாளாகக் கடைப்பிடிக்கவுள்ளோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் ஒன்றியத் தலைவி உதயச்சந்திரா தெரிவித்தார்.
மன்னாரில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இல்லாத சுதந்திர நாளை இலங்கை கொண்டாடவுள்ளது. நாங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி இலங்கையின் சுதந்திர நாளை கரிநாளாகக் கடைப்பிடிப்போம்.
கடந்த 14 ஆண்டுகளாகப் போராடுகின்றோம். எங்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு தேவை.
மேலும், பெப்ரவரி 5 ஆம் திகதி மன்னாரில் கரிநாள் போராட்டம் நடைபெறும் என்றார்.
TL